திருகோணமலை நன்னீர் மீன் உற்பத்தியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தின் நன்னீர் மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நன்னீர் மீன் உற்பத்தியாளர்களுக்கு படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை இன்று(25) வழங்கிவைக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்ஷனா பாண்டி கோரல்ல தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல கலந்துகொண்டு, கருத்து தெரிவிக்கும் போது,
இதற்காக நிதி ஒதுக்கிய மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேசேகர ஆகியோருக்கு திருகோணமலை மாவட்ட மீன்வள சமூகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மொரவெவ பிரதேச சபை தலைவர் ஜகத் வெரகொட, மீன்வள அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நன்னீர் மீனவர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.







No comments