Breaking News

ஜனநாயக இடதுசாரி முன்னணியால் மதிய உணவு விநியோகம்!


கிண்ணியா சுகாதார பிரிவில் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜநாயக இடதுசாரி முன்னணியால் மதிய உணவு இன்று (31) விநியோகிக்கப்பட்டது.

கட்சியின் உறுப்பினரான ஏ. எச். எம். இன்ஸாத்தின் வேண்டுகோளுக்கிணங்க, திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் றாஸிக் ரியாஸ்தீன்  இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இந்நிகழ்வில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கிண்ணியாவுக்கான பெண்கள் அணித் தலைவி ஜரீனாவுடன் கட்சியின் உள்ளூர் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





No comments