கிண்ணியாவில் சேதனப் பசளை தயாரிப்பு!
(எம்.ஏ.முகமட்)
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக நஞ்சற்ற உணவினை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்கும் நோக்கில் சேதன பசளை தயாரிக்கும் நிகழ்வு கிண்ணியா அரை ஏக்கர் கழிவு அகற்றல் நிலையத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் கே.எம்.நிஹார் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில், சேதனப் பசளை தயாரிப்பது சம்மந்தமாக, விளக்கத்தினை விவசாய போதனாசிரியர் நிஹாஸ் வழங்கினார்.
இங்கு தயாரிக்கப்படுகின்ற சேதன பசளைகளை இப்பிரதேச விவசாயிகளுக்கு விற்பனை செய்து, அவர்களுக்கு நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்யும் விவசாய முறையில் நாட்டத்தை ஏற்படுத்தப் போவதாக இதன்போது பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார், உப தவிசாளர் ஏ.எச் .எம். பாசித், செயலாளர் எஸ். அஸ்வத்கான், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.எம்.அனஸ் மற்றும் விவசாய போதனாசிரியர் நிஹாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.





No comments