உயிரிழப்பு ஏன்? காரணம் வெளியானது!
கொரோனா தொற்றாளர் சமூகத்தில் மறைந்திருப்பது இஸ்லாமிய பார்வையில் கொலை செய்வதற்கு ஒப்பானதாகும் - கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி
( கியாஸ் ஷாபி )
கொவிட்-19 தொற்றின் 03வது அலையின் தாக்கம் மிக வேகமாக பரவி வருவதானால் பொது மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு, கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம். எச். எம். றிஸ்வி தெரிவித்தார்.
கிண்ணியாவின் கொரோனா நிலவரம் தொடர்பாக இன்று(9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மேல் மாகாணத்தில் டெல்டா பிறழ்வு வேகமாக பரவி வருவதால் அதன் தாக்கம் இங்கும் ஏற்படலாம். இதன் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு வருவோருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசாங்க வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், கிண்ணியா சுகாதார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இவ்வாண்டு மே மாதம் 31 ஆம் திகதியில் இன்று வரை 35 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். இதில் மே மாதம் மாத்திரம் 21 நாட்களில் 25 பேர் கொரோனாவினால் பலியாகியுள்ளனர். இது இந்த மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய அனர்த்தமாகும்.
இந்த அனர்த்தம் மீண்டும் ஏற்படாமல் இருக்க மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடப்பதுமே ஒரே வழியாகும்
கொரோனாவின் மூன்றாவது அலையில் 470 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் ஒளிந்து மறைந்து இருந்தவர்களை கணக்கிட்டுப் பார்த்தால் பாதிக்கப்பட்டோர் ஆயிரத்தையும் தாண்டி இருக்கும். இவர்கள் மறைந்து இருந்து மற்றவர்களின் மரணத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இது இஸ்லாமிய பார்வையில் கொலை செய்ததற்கு ஒப்பானதாகும்.
தடுப்பூசி தொடர்பாக எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.இது தொடர்பாக சமூகத்தில் நிலவுகின்ற வதந்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம். இந்தப் பிரதேசத்தில் சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் அவர்களில் எவரும் இதுவரை பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டதாக எமக்கு எந்த ஒரு முறைபாடும் கிடைக்கவில்லை. எனவே தடுப்பூசி குறித்து சமூகத்தில் நிலவுகின்ற கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் என மக்களை கேட்டுக்கொண்டார்.
அத்தோடு தொற்று வேகமாக அதிகரித்துச் செல்வதற்கு சுகாதாரத் துறையினர் கூறுகின்ற வழிமுறைகளை மக்கள் சரியாக கவனம் எடுத்து பின்பற்றப்படாமை ஒரு முக்கிய காரணமாகும். அடுத்து covid-19 ஒரு சாதாரண தொற்று என மக்கள் இன்னும் ஊகித்துக் கொண்டிருக்கின்றமை. மேலும் மக்கள் இவ்வாறானதொரு தொற்று ஒன்று இருக்கின்றது என்ற தகவல் ஒரு கட்டுக்கதை என்று நம்பி இருக்கின்றமை என்றும் தெரிவித்தார்.
வைத்திய அதிகாரி மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் கொவிட்- 19 மூன்றாம் அலையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதோடு, கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ளது.
கொவிட்-19 தொற்றாளர்களுக்கு
சிகிச்சையளிப்பதற்கு வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை காணப்படுவதால் பொது மக்களை மிக அவதானமாக செயற்படுமாறும் பள்ளிவாசல்கள் மற்றும் மதஸ்தலங்களில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக
கடைப்பிடிக்குமாறும் கொவிட்-19 தொற்றை தடுப்பது தொடர்பாக சுகாதார அமைச்சு மற்றும் கலாசார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செயற்பட வேண்டுமெனவும் சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுக்க
உயிரிழப்பு ஏன்? காரணம் வெளியானது!
Reviewed by NewsTimeTamil
on
August 10, 2021
Rating: 5
Reviewed by NewsTimeTamil
on
August 10, 2021
Rating: 5






No comments