Breaking News

ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.






கிண்ணியாவில் அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். 

( கியாஸ்  ஷாபி) 

கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பெரும்பாலான அதிபர், ஆசிரியர்கள் தங்களுடைய பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிட்டு இன்று(21) பணிக்கு திரும்பி இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. இதேவேளை தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையிலேயே கிண்ணியாவில் பெரும்பாலான அதிபர்களும் ஆசிரியர்களும் பணிக்கு திரும்பியி ருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

தேசிய ரீதியாக தொழிற்சங்கங்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் இன்று பணிக்கு திரும்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். இதேவேளை அரசாங்கம் இன்று சகல அதிபர் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது 

கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 31 பாடசாலைகள் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டு இருக்கின்றது. இதனை இன்று ஆரம்பிப்பதற்கு வலயக் கல்வி அலுவலகம் சகல நடவடிக்கையும் எடுத்து இருந்தது.

இந்த நிலையிலேயே இதில் 25 அதிபர்கள் பணிக்குத் திரும்பிய அதேவேளை 270 ஆசிரியர்களில் 120 ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியிருந்தனர் என வலயக் கல்வி பணிப்பாளர் ஏ. நசூஹர்கான் தெரிவித்தார்

No comments