தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டிய மாற்றுத்திறனாளிகள் கௌரவிப்பு.
திருகோணமலை வலயக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளின் விசேட கல்விப் பிரிவில் கல்வி கற்று, தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதற்கான நிகழ்வு, நேற்று(5) நிலையான உலகை நோக்கியதான மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவமும், பங்கேற்பும் என்ற தொனிப்பொருளில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் வலயக்கல்விப் பணிப்பாளர் S.சிறீதரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, திருகோணமலை மாதுமை அம்பாள் வித்தியாலயம் மாணவன் வரதகுமார் விதுசன் (பரிதி வட்டம் -1ஆம் இடம்), திருகோணமலை கலைமகள் மகா வித்தியாலய மாணவன் சாந்தகுமார் சஞ்சயன் (100 மீற்றர்ஓட்டம் - 3ஆம் இடம்), திருகோணமலை கலைமகள் மகா வித்தியாலயம் ரவி அஸ்வின் (பரிதி வட்டம் -1ஆம் இடம், குண்டெறிதல் 1ஆம் இடம்), திருகோணமலை அல்-அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் முகம்மது ஆசிக் முகம்மது ராசித் (பரிதி வட்டம் -1ஆம் இடம், 100M ஓட்டம் -1ஆம் இடம்) ஆகியோர் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.





No comments