கிண்ணியாவில் 66 பாடசாலைகளுக்கும் பூட்டு.

(கியாஸ் ஷாபி)
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் நேற்று (20) ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட 66 பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று (21) காலை கிண்ணியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் அவசரமாக கூட்டப்பட்ட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. நசூகர்கான், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.ஏ. அஜீத், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். றிஸ்வி, நகரசபைத் தவிசாளர் எச்.எம். நளீம், பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம். நிகார் ஆகியோரோடு, உலமா சபை, பள்ளிவாயல் சம்மேளனம், மஜ்லிஸ் அஸ் சூறா, பொலிஸ் நிலையம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மேலும், இந்தக் கூட்டத்தில், கொரானா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட மாஞ்சோலை மற்றும் அண்ணல் நகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்துவதற்கும் தீர்மானிக்க்ப்பட்டது.
மீன், இறைச்சி, கோழி,தேநீர் விற்பனை நிலையங்களை மூடுவதற்கும்தீர்மானிக்கப்பட்டதோடு, தனியார் வகுப்புக்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
பள்ளிவாசல்களை தொழகைக்காக பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டிருப்பதோடு, புடவை கடை சலூன் ஆகியவற்றை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு முகக்கவசம் அணியாதோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை கடுமையாக பிரயோகிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.





No comments