கிண்ணியாவில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

(கியாஸ் ஷாபி)
கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த விடயம் குறித்து, கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி A.M.M.அஜிதிடம் கேட்கப்பட்ட போது,
கடந்த சனிக்கிழமை (19) இறைச்சி வியாபாரத்தோடு, சம்மந்தப்பட்டவர்களும் கொழும்பில் இருந்து கிண்ணியாவுக்கு வந்தவர்களும் என 43 பேரின் இரத்த மாதிரிகள் PCR பரிசோதனைக்காக மட்டக்களப்பு கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அதில் இருவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக நேற்று (20) மாலை எமக்கு அங்கிருந்து அறிக்கை கிடைத்தது.
எனினும் மேலும் அவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நேற்று (20) நள்ளிரவு ஆறு பேர் Rapid Antigen பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அந்த ஆறு பேருக்கும் கொரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றும் இவர்கள் கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலவலகப் பிரிவுக்குட்பட்ட நான்கு பொதுச் சுகாதார பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நிலையில், கொழும்புக்கு சென்று வருபவர்கள் தொடர்பில், பொது மக்கள் மிக்க அவதானமாக இருக்க வேண்டும் எனவும், அவர்களை சுகாதாரப் பகுதியினர் இனங் காண்பதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.





No comments