Breaking News

7 நாட்களில் 104 நபர்களுக்கு தொற்று


(கியாஸ் ஷாபி)

கடந்த 2020.12.20 ம் திகதிக்கு பின்னர் இற்றைவரையான காலப்பகுதியில் புதிதாக திருகோணமலை மாவட்டத்தில் 104 நபர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

அதன்படி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளான திருகோணமலையில் 58 பேருக்கும் மூதூரில் 28 பேருக்கும் கிண்ணியாவில் 9 பேருக்கும் தம்பலகாமத்தில் 5 பேருக்கும் சேருவலயில் 3 பேருக்கும் மற்றும் கோமரங்கடவெல பிரிவில் ஒருவரும் இதில் அடங்குவர்.

அத்துடன் தொற்றாளர்களோடு தொடர்புபட்டவர்கள் சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உரிய பிரதேச செயலகம் மூலம் அரசாங்கத்தின் உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டும் வருகின்றது.மக்கள் மாவட்டத்தில் கொவிட் தொற்று மேலும் பரவா வண்ணம் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்தல் வேண்டும். தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் சுற்றாடலை தூய்மையாக வைத்திருத்தல் மூலம் டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறமுடியும். எனவே குறித்த விடயங்களை கவனத்திற்கொண்டு செயறபடுமாறு அரசாங்க அதிபர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


No comments