AHRC நிறுவனத்தின் மனிதாபிமான உதவி
( வடமலை ராஜ்குமார்)
கொரோனாவின் தாக்கமானது கிழக்கு மாகாணத்தில் அண்மையில் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. இவ்வாறு அதிகரித்துவரும் கொரோனா நோய் தொற்றினால் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 06 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிராமங்களில் 100 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களான அபயபுர, முருகாபுரி, ஐமாலியா போன்ற கிராமங்களிலுள்ள 300 குடும்பங்களுக்கு தலா 1400.00 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஊடாக AHRC நிறுவனத்தினால் சிவில் அமையம் திட்டத்தின் கீழ் நேற்று (25) அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் திரு.கண்டுமணி லவகுசராசா அவர்களின் தலையில் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் AHRC பிரதி இணைப்பாளர் திரு.அழகுராசன் மதன் மற்றும் திட்ட இணைப்பாளரான திரு.இ.ரமேஸ் மற்றும் உதவித் திட்ட இணைப்பாளர் திரு.ரீ.கிரிசாந் ஆகியோருடன் சிவில் அமையம் திட்ட இணைப்பாளர் திரு.ஏ.அரவிந்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.







No comments