Breaking News

ரஜனியை யாரும் பாா்க்க முடியாது!




ஹைதராபாத்: ரஜினிகாந்த் நன்றாக இருக்கிறார்..ஆரோக்கியமாக ஓய்வில் இருக்கிறார். அவரை பார்க்க அனுமதி இல்லையென்பதால் யாரும் அவரை பார்க்க வர வேண்டாம் என்று அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களும், ரஜினிகாந்த் குடும்பத்தினரும் கேட்டுக் கொண்டுள்ளனர். 

இன்று மதியம், ரஜினிகாந்த்துக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. அதனால்,  ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. பிறகு சிறிது நேரத்திலேயே ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியானது, அதில், ரஜினிகாந்த்துக்கு கொரோனா அறிகுறிகள் இல்லையென்றாலும், அவரது ரத்த அழுத்த அளவு கடுமையாக ஏறி இறங்கி வருகிறது. அதற்கான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது இரத்த அழுத்தம் சீராகி, அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வரை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சை தரப்படும்.
ரத்த அழுத்த அளவில் மாறுபாடு, உடல் சோர்வை தாண்டி அவருக்கு வேறெந்த பிரச்சினைகளும் இல்லை. அவரது இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவை சீராக இருக்கின்றன என்று கூறியிருந்தது. 

இந்நிலையில், ரஜினியின் உடல்நிலை குறித்து தற்போது மறுபடியும் அப்பல்லோ நிர்வாகம் ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.. அதில், "ரஜினிகாந்தின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க சரியான அளவு மருந்துகள் தரப்படுகின்றன... அவர் இன்றிரவு ஆஸ்பத்திரியில் இருப்பார்.. நாளை மேற்கொண்டு அவரது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று பார்க்கப்படும். அவர் ஆரோக்கியமாக, ஓய்வில் இருக்கிறார்.


No comments