Breaking News

கிண்ணியாவில் 21 பேருக்கு அன்டிஜென் பரிசோதனை!

 

(கியாஸ் ஷாபி)   

கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (25) இரவு 21 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா அன்டிஜென் பரிசோதனையில் எவரும் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பபடவில்லை என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் A.M.M.அஜித் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  இன்றைய பரிசோதனைக்கு கடந்த 2020.12.19 ஆம் திகதி  தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களோடு தொடர்புபட்டவர்கள் என அடையாளங் காணப்பட்டவர்கள்  உட்படுத்தப்பட்டனர் என்றும் நாளை (26) எழுந்ததமானதாக தெரிவு செய்யப்பபடுகின்ற 60  நபர்கள் 
பி சி ஆர் பரிசோதனைக்கு உட்பபடுத்தப்படவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

நாளாந்தம் பிரயாணம் செய்பவர்கள், அடிக்கடி பயணம் செய்பவர்கள், அங்காடி வியாபாரிகள், வியாபாரிகள், சாரதிகள் ஆகியோர் தாமாக முன்வந்து இந்த பரிசோதனையைப் பெற்றுக் கொள்ளலாம்.   

கொரோனா பரவல் தொடர்பாக அவ்வப்போது, சில போலித் தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளிவருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இது குறித்து மக்கள் அச்சமடைய தேவைையில்லை. இதுவரை எட்டு தொற்றாளர்களோடு நாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம். இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பு தொடர்ந்து தேவைப்படுகின்றது என்றும் தெரிவித்தார்



No comments