Breaking News

பொது மக்கள் நுழைவது தடை

 


( மூதூர் றஸ்மின்)

மூதூர் கொரொனா தடுப்புக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக,மூதூரில் தற்போது கொரோனா தொற்றாளிகள் அடையாளங்காணப்பட்டுள்ள  தாஹா நகர் வீதி மற்றும் சேர்ச் வீதி  ஆகிய பிரதேசங்களின் எல்லைப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு தடுப்பு காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகளை  மூதூர் பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்திய  அதிகாரி காரியாலயம் மற்றும் பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து  மேற்கொண்டு உள்ளன. 

எனவே, பொதுமக்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ள குறித்த பிரதேசங்களுக்குள் நுழைவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 




No comments