Breaking News

இனவாதம்,மதவாதம் வேண்டாம்!

 


( கியாஸ் ஷாபி )

திருகோணமலை, யான் ஓய ராஜ மகா விகாரையில் தலைமை பீடாதிபதியாக இருந்த வணக்கத்திற்குரிய எலகம்மில்லாவ சுபூதி வங்ச தேரோவின் இறுதி சடங்கு நேற்று (24) நடைபெற்றது.

இந்நிகழ்வில் முஸ்லிம், தமிழ் மதப் போதகர்களும்  மக்களும் பெருமளவில் கலந்து கொண்டிருந்தமை  ஒரு சிறப்பம்சமாகும்.

இந்த நிகழ்வில் திருகோணமலை பாராளமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரளயும் கலந்து கொண்டிருந்தார்.  


இதன்போது பாராளமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், இந்த இறுதிச் சடங்கில் இரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தோர் அதிகமாக கலந்து கொண்டிருப்பது, இந்த நாட்டிற்கு இனவாதம், மதவாதம் வேண்டாம் என்ற செய்தியைச் சொல்கின்றது. எனவே, மூன்று இனங்களும் வசிக்கும் திருகோணமலை போன்ற ஒரு மாவட்டத்தில் இருந்து, இன ஐக்கியத்தின் அவசியத்தை நாட்டுக்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது.  

இந்த நிலை  அமைதியான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான சிறந்த வாய்ப்பை உருவாக்கும் என  நான் கருதுகின்றேன் என்று தெரிவித்தார்.




No comments