மூதூரில் இலக்கிய போட்டிகளில் சாதனை படைத்தவர்கள் கெளரவிப்பு.
மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் பாடசாலை மற்றும் திறந்த மட்டங்களில் 2020 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் 1ஆம், 2ஆம், 3 ஆம் இடங்களைப் பெற்ற மாணவர்களும் கலைஞர்களும் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
பிரதேச செயலாளர் எம்.எம். முபாரக் தலைமையில், கலாச்சாரப் பிரிவு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (16 )நடைபெற்றது.
இதன்போது, பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கணக்காளர் நிர்வாக உத்தியோகத்தர், மூதூர் கலை இலக்கிய மன்ற செயலாளர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தியதோடு, கலைஞர்கள் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.









No comments