Breaking News

‘"தேசத்தை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’"


"தேசத்தை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’" எண்ணக்கருவின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தினை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவாவின் ஆலோசனைக்கமைய இன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டதின் மூலம் கினிகத்தேன, ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை ஆகிய நகரங்கள் புதுப்பொழிவு பெறவுள்ளன.

அந்த வகையில் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் அவரின் ஆலோசனைக்கமைய  கொட்டகலையில் காணப்படும் ஈரவலயமான பகுதியினை பூங்கா மற்று சுற்றலா பயணிகளின் நடை பாதைகள், வர்த்தக நிலையங்கள், ஆகியன இதன் போது அபிவிருத்தி செய்ய திட்டமிட்டதற்கு அமைய அதற்கான வேலைத்திட்டங்கள் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க , இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், நகர பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments