Breaking News

திருமலைக்கு ஆளும் கட்சியில் முஸ்லிம் பிரதிநிதி தேவை !


 (ஹசன் நஜபி)

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து, ஆளும் கட்சி சார்பாக முஸ்லிம் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும் என திருகோணமலை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுசன பெரமுன இளைஞர் அமைப்பாளர் ஏ.எஸ். சல்மானுல் பாரிஸ் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகளிர் சங்கம் தற்போது  உருவாக்கப்பட்டு வருகின்றது.

இத் திட்டத்தின் கீழ், கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியாற்றுமுனை  கிராமசேவகர் பிரிவுகவுக்கான  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  மகளிர் சங்கம் இன்று   (20) அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் உரையாற்றும்போதே அவர், இவ்வாறு தெரிவித்தார். 

அவர், அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், இங்கிருந்து எதிர்கட்சிக்காக நாம் இரு முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்களை உருவாக்கி இருக்கிறோம். இதன் மூலம் அவர்கள்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் மக்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை ஆதரிக்காமல் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்தை அவர்கள் எதிர்பார்க்க முடியாது.

எனவேதான் எவ்வாறு அவர்களால் அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை நான் கேட்கிறேன்.

ஆளுங்கட்சியில் ஒரு பிரதிநிதியை பெரும்பான்மை இன மக்கள்  இந்த மாவட்டத்திலிருந்து தெரிவு செய்திருக்கிறார். இதன்மூலம் அந்த மக்கள் வெற்றி பெற்று விட்டார்கள். 

எனவே, தோல்வி அடைந்த மக்களுக்காகவும்  அரசியல் ரீதியாக அநாதைகளாக்கப்பட்ட மக்களுக்காகவும் ஆளுங்கட்சி உறுபினரோடு சேர்ந்து, நாங்கள் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். 

இன ,மத , பிரதேச வேறுபாடின்றி, சேவையாற்றி வருகின்ற ஆளுங்கட்சி உறுப்பினரான கபில நுவான் அத்துகோரள கிண்ணியாவை அபிவிருத்தி செய்வதற்கு என்றும் ஆயத்தமாக இருக்கிறார். இதன் காரணமாக இவரோடு சேர்ந்து, எமது அரசியல் பயணத்தை மேற் கொள்கின்ற போதுதான், எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலில், ஆளுக்கட்சி சார்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள முடிவதோடு, அபிவிருத்திக்கான எமது அடையாளத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.     

பெண்களை மையப்படுத்தி, பல்வேறு அபிவிருத்தி திட்டங்கங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இதனை நமது பிரதேசமும் அடைய வேண்டும் என்பதற்காக சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் மகளீர் சங்கங்களை அமைத்து வருகிறோம்  என்று தெரிவித்தார். 









No comments