திருமலையில் வெள்ள அபாயம் i
(முள்ளிப்பொத்தானை ஐயூப்கான்)
கடந்த 24 மணி நேரமாக பெய்து வரும் அடைமழை காரணமாக கிண்ணியா மற்றும் தம்பலகாமம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தம்பலகாமத்தில் ஜாமியா நகர், தாயிப் நகர், புஹாரி நகர் போன்ற பகுதிகளும் கிண்ணியாவில் றஹ்மானியா நகர், அண்ணல் நகர், மதினா நகர், பெரியாற்று முனை ஆகிய பகுதிகளுமே இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த நிலை எதிர்காலத்தில் ஏற்படாதவாறு நன்கு திட்டமிட்ட அடிப்படையில் வடிகான்களை அமைக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட "சப்ரிகம" அபிவிருத்தி திட்டத்தின் ஊடக சில இடங்களில் நிர்மாணிக்க்பட்ட வடிகான்கள் கூட நீர் வடிந்தோடமுடியாத நிலையிலே இருப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.










No comments