Breaking News

வட்டவளை பகுதியில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா



(எஸ்.சதீஸ்)

இதனை தொடர்ந்து தொற்றாளருடன் தொடர்பில் இருந்த 118 பேர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளதுடன் அட்டன் நகரிலுள்ள மூன்று கடைகள் மூடப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் மவுண்ஜின் தோட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களுக்கு கடந்த 16, ஆம் திகதி மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போதே குறித்த இளைஞனுக்கு தொற்று உறுதியானது.

இதனையடுத்து வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த 118 பேர் சுயதனிமைப் படுத்தப்பட்டுள்ளதுடன் தொற்றாளர் சென்ற அட்டன் நகரிலுள்ள மூன்று கடைகளும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.




No comments