Breaking News

NLPF கட்சிக்கு வயது இரண்டு

 


(கியாஸ் ஷாபி)

தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் (NLPF) 2 ஆம் வருட பூர்த்தியை முன்னிட்டு, திருகோணமலை கட்சிக் காரியாலயத்தில்  மரம் நடுகை நிகழ்வு நேற்று (19) இடம்பெற்றது.

தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன்  பொது செயலாளர்.M.A இஸ்மாயில், பிரதி பொது செயலாளர் M.பாஷித் மற்றும் கட்சியின் இணைப்பாளர் M.B.பைசர் ஆகியோர் இதில்  கலந்து கொண்டனர்.

எமது கட்சியின் இரண்டாம் வருட நிறைவையொட்டி,  2020/12/21 ஆம் திகதி திருகோணமலை மாவட்டம் பூராகவும் பொது இடங்கள் மற்றும் வணக்கஸ்தலங்களில்மரக்கண்டுகள் நடும் நிகழ்வை பெரிய அளவில் நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம். எனினும்  சுகாதார வைத்திய அதிகாரிகளின்  அனுமதி கிடைக்காததால் இந்நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டு, ஒரு அடையாள நிகழ்வாக எமது கட்சிக் காரியாலயத்தில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தோம் என தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்தார். 


No comments