பொதுசன இளைஞர் பெரமுன மாநாடு
(ஹஸன் நஜபி)
திருகோணமலை மாவட்ட சேருவில தொகுதிக்கான ஸ்ரீலங்கா பொதுசன இளைஞர் பெரமுன மாநாடு நேற்று (13) கந்தளாய் நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சுகாதார வழிகாட்டிகளின் வழிகாட்டுதலின் கீழ், நடைபெற்ற இந்த மாநாட்டில், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனயின் திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கபில நுவான் அத்துகோரள மாவட்டத் கம்பஹா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக, பிரதமரின் நாடாளுமன்ற விவகார செயலாளர் பிரியந்த ரத்நாயக்க, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் நிலந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு, திருகோணமலை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுசன இளைஞர் பெரமுன அமைப்பாளர் ஏ.எஸ். சல்மானுல் சப்ரி உட்பட உள்ளுராட்சி பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர்.








No comments