வீட்டிலிருந்து தப்பியோடிய கொரோனா தொற்றாளர்
சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகொல பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 22 வயது இளைஞன் ஒருவர் வீட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என தெரிவிக்கும் பொலிஸார், அவரை கண்டுபிடிப்பதற்குபொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.
பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த இளைஞன் அதன் முடிவு வெளிவரும்வரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். கொரோனா தொற்று உறுதியானதையடுத்தே அவர் தப்பியோடியுள்ளார்.
இவரை கண்டாலோ, இவர் தொடர்பான தகவல் கிடைத்தாலோ 0718591599 – 0112400315 – 119 இற்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர். பொலிஸாரும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.






No comments