கிண்ணியாவில் மேலும் இருவருக்கு கொரோனா !!
கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது என கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி A.M.M.அஜித் இன்று (24) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மேலும் 32 பேருக்கு நேற்று (23) இரவு நேற்று கொரானா அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்ட போது, இவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டனர். இத்தோடு, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் மொத்தம் எட்டு பேர் கொரானா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்த அவர், இந்த இவரும் ஏற்கெனவே, தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கொழுமபு மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்று வந்தவர்களில், மேலும் 21 பேரின் இரத்த மாதிரிகள் PCR பரிசோதனைக்காக நேற்று மட்டக்களப்பு கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. அதனுடைய பரிசோதனை முடிவுகள் இன்று (24) மாலை கிடைக்கப்பெறும்.
இதேவேளை, கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் இலங்கையில் அதிகரித்த நிலையில் காணப்படுவதால், கிண்ணியா பிரதேசமும் கொரோனாவின் சவாலை எதிர்நோக்கியிருக்கின்றது. இவற்றை முறியடிப்பதென்றால், பொதுமக்களின் ஒத்துழைப்பே அதிகமாக தேவைப்படுகின்றது. பொதுமக்களின் நடத்தை அடிப்படையிலேயே எமது எதிர்காலம் தீர்மானிக்கப்பட இருக்கின்றது. என்றும் தெரிவித்தார்.






No comments