Breaking News

பயணிகள் திருகோணமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளவும் !


(கியாஸ் ஷாபி) 

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 66 கொவிட் தொற்றாளர்கள் இனங் காணப்பட்டு இருப்பதால், தற்போதைய சூழ்நிலையில் அத்தியவசிய தேவை தவிர, ஏனைய தேவை கருதி  பிற மாவட்டங்களில் இருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு வருபவர்கள் தமது பயணங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்ற விசேட கொவிட் கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இந்த தீர்மாானம் எடுக்கப்பட்டதாகவும் மாவட்ட மக்கள் இச்சந்தர்ப்பத்தில் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிப்பதுடன் ஒன்று கூடல் உட்பட அநாவசிய பயணங்களில் இருந்து தவிர்ந்து வைரசை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.


No comments