வணக்க வழிபாடுகளுக்கு கைத்தறி ஆடைகள்
(கியாஸ் ஷாபி)
நாட்டின் தனித்துவத்தை வெளிக்கொணரும் வகையில் தேசிய ரீதியாக கைத்தறிமூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளை அணிந்து தேவ வழிபாடுகளை நடாத்தி நத்தார் பண்டிகையை கொண்டாட கர்தினால் உட்பட ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதற்கிணங்க நத்தார் பண்டிகைக்குரிய தேவ வழிபாடு உட்பட அலங்காரங்களுக்கான அவசியமான ஆடைகள் இம்முறை உள்நாட்டு கைத்தறிமூலம் உற்பத்தி செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.
இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட தேவ வழிபாட்பாட்டுக்கான ஆடைகள் திருகோணமலை மறை மாவட்ட அதிவணக்கத்திற்குறிய ஆயர் கலாநிதி நொயேல் கிறிஸ்ட்டியன் இமானுவேல் ஆண்டகைக்கு இன்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் பத்திக்,கைத்தறி மற்றும் உள்நாட்டு ஆடையுற்பத்தி இராஜாங்க அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஜி.ஹரிதனினால் நேற்று (23) திருகோணமலை ஆயர் இல்லத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.





No comments