Breaking News

கங்கையில் அடித்துவரப்பட்ட நீர்த்தாவரங்களால் வெள்ள ஆபத்து

 


(பொன் சற்சிவானந்தம்)

மூதூர் பகுதியில் உள்ள அரபா நகர் பாலத்தின் கீழ் கங்கையில் அடித்துவரப்பட்ட பல்வேறு வகையான நீர்த்தாவரங்கள் நிரம்பி பரவி காணப்படுகின்றன. 

இதனால் கடலுக்குசெல்லும் வெள்ளநீர் வெளியேறுவதில் தடங்கல்கள் ஏற்பட்டிருப்பதாக கங்கை வடிகால் பகுதியில் வாழும்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்

கிளிவெட்டி, தோப்பூர், மூதூர் என பெரு வயல்நிலப்பரப்பினூடாக வெளியேறும் மகாவலி கடல் நீரைச்சேரும் மார்க்கமாக இந்த வடிக்கை உள்ளது. 

இந்நிலை மகாவலி வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட நீர்த்தாவரங்கள் கங்கை புலப்படாத வண்ணம் நீர் மேல்பரவிக்கிடக்கின்றன. 

இதனால் நீர்வெளியேறுவதில் தடங்கல்கள் நிலவுகின்றது.இதன் காரணமாகவே பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது 

அது மட்டும் அன்றி  கிணாந்திமுனை தொடக்கம் தோப்பூர் வரை பல ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது உரியவர்கள் கவனத்திற்கொண்டு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர் 




No comments