Breaking News

போசாக்கு குறைந்த குடும்பங்களுக்கு சத்துணவு பொதிகள்


                            (ஹஸ்பர் ஏ. ஹலீம்) 

குலோபல் இஹ்ஸான் நலன் புரி உதவி நிறுவனத்தின் ஊடாக தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நிறைகுறைந்து போசாக்கு பிரச்சினையினை எதிர்நோக்குகின்ற குடும்பங்களுக்கு சத்துணவு பொதிகள் வழங்கி  வைக்கப்பட்டன.

இதற்காக 2 தொடக்கம் 5 வரையான வயதுடைய, பிள்ளைகளைக் கொண்ட 100 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. இதில் முதற்கட்டமாக  50 குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டன.

பால்மா பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (29) தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதியின் தலைமையில் இடம்பெற்றது. 

தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.பிரசாந்தன்,  உதவி திட்டமிடல் பணிப்பாளர்  ஐ.முஜீப், கிராம நிருவாக உத்தியோகத்தர் என்.ஜெயகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments