கிண்ணியாவில் இரு கிராமங்கள் முழுமையா வெள்ளத்தில் மூழ்கின.
(கியாஸ் ஷாபி)
கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரு கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு அவை வெள்ள நீரால் சூழப்பட்டிருப்பதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உப்பாறு மற்றும் மஜீத் நகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்தப் பிரதேசங்களில் இருந்து 53 குடும்பங்களைச் சேர்ந்த 123 அங்கத்தவர்கள் பாதிக்க்பபட்டுள்ளனர்.
இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் 139 குடும்பங்களைச் சேர்ந்த, 507 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பிரதேச செயலாளர், இது சம்மந்தமான முழு அறிக்கையினையும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.








No comments