கிண்ணியாவில் இதுவரை 326 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 97 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனயும் 13 பேருக்கு அன்டிஜென் பரிசோதனையும் நேற்று (28) மாத்திரம் செய்திருப்பதாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.ஏ. அஜித் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த நாட்டின் 2வது கொரோனா அலைக்கு பின்னர் கிண்ணியா சுகாதார வைத்திய அலுவலப் பிரிவில், இதுவரை 326 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனையும் 156 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும்மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.
இதேவேளை, PCR பரிசோதனைக்காக 46 பேருடைய இரத்த மாதிரிகள் மட்டக்களப்பு கொரோனா மத்திய நிலையத்துக்கு கடந்த 2020.12.27 ஆம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அதனுடைய பெறுபேறுகள் இன்று மாலை கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்த அவர், எமது பிரதேசத்தில் இருந்து இதுவரை 11 பேர் கொவிட் - 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டிருக்கிறார்கள் என்றும் மேலும் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் வெளி இடத்தில் இனங்காணப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.






No comments