சுகாதார வைத்திய அதிகாரிகள் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் எம்.எச்.எம்.றிஸ்வி இன்று (31) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய இவர், வருடாந்த இடமாற்றத் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தால், கிண்ணியா பிரதேசத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்தே உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதேவேளை, கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் ஏ.எம்.ஏ. அஜீத் குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (31) முதல் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இவர்களுக்கான பிரியாவிடை வைபவமும் இன்று ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







No comments