Breaking News

அரசாங்க அதிபரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி


(கியாஸ் ஷாபி) 

மலர்ந்துள்ள 2021 ம் ஆண்டு அனைவர்வாழ்விலும் ஒளிமயமானதாக அமைப்பெற்று சீரும் சிறப்பும் பெற்று வாழ வாழ்த்துவதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தமது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாடு கொவிட் தொற்றை எதிர்நோக்கியுள்ள நிலையில் அரசாங்கம் அவற்றை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் கொவிட் தொற்றை ஒழிக்க மக்கள்   பொறுப்புடன் செயற்படல் வேண்டும்.கொவிட் தொற்றுக்கு மத்தியில் நாட்டின் அபிவிருத்தி பாதிக்கப்படாதவண்ணம் செயற்பாடுகளை சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி மேற்கொள்ளல் வேண்டும். இதன் மூலம் எமது தேசத்தை வளமான தேசமாக மாற்றியமைக்க முடியும் .எனவே அனைவரும் பாதுகாப்பாக இருந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு  எமது தேசத்தை வளமான தேசமாக மாற்ற திடசங்கற்பம்பூணுவோம் என்றும்  வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments