Breaking News

கபில எம்.பி.யின் புது வருட வாழ்த்துச் செய்தி.

(கியாஸ் ஷாபி)

பரவியுள்ள கொவிட் வைரசிலிருந்து அனைவரும் பாதுகாப்பு பெற்று சுபீட்சத்தின் நோக்கு அபிவிருத்தி திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி மக்கள் வாழ்வில் சுபீட்சம் ஏற்படுத்தும் ஆண்டாக மலரும் புதுவருடம் அமைய வாழ்த்துவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரள தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கொவிட் வைரசிற்கு மத்தியிலும் மக்கள் நலன் கருதி பல அபிவிருத்தி திட்டங்கள் திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மாவட்ட அபிவிருத்தி கருதி பல வேலைத்திட்டங்கள் மலரும் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் எவ்வித வேறுபாடின்றி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். மக்கள் இதன் பங்காளிகளாக மாற வேண்டும். எமது மாவட்டத்தை சகல துறைசார் விடயங்களிலும் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் தமது வாழ்த்துச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments