முதியவர்கள் எமது நாட்டின் சொத்துக்கள்.
(பொன் சற்சிவானந்தம்)
முதியவர்கள் எமது நாட்டின் சொத்துக்கள். அவர்களது முதுமைக்காலமென்பது மிகவும் சிரமமானதாகவே இருக்கும். இந்த முதியோர் இல்லத்தின் தேவைகளை எதிர்காலத்திலும் எம்முடன் இணைந்து பணியாற்றும் தொண்டர் அமைப்புகளுடன் இணைந்து நிறைவேற்றுவோம் என மாவட்ட செயலாளர் சமன் தர்சன பாண்டிகொரள தெரிவித்தார்.
திருகோணமலை புனித ஜோசப் முதியோர் இல்லத்தில் வருடாந்த நிகழ்வு இன்று மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஜீவிதன் சுகந்தினி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் இந்த அம்மாக்களின் நிகழ்வை பார்க்கின்றபோது மிகவும் சந்தோசமாகவுள்ளது. இவர்கள் இளமைக்காலங்களில் எவ்வாற செயற்பட்டிருப்பார்கள் என்பதனை உணரமுடிந்தது. நம் நாட்டின் சொத்துக்களான முதியோரை நாம் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் நிதி உதவியுடன் பெற்றுக் கொண்ட புதிய நீர்பம்பி ஒன்றையும் நிருவாகத்தினரிடமும் அவர் கையளித்தார்.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ந. பிரதீபன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் இணைப்பாளர் பொ. சற்சிவானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.









No comments