Breaking News

கிண்ணியாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

  

(கியாஸ் ஷாபி)

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட மேலும் ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம். ஏ. அஜித் இன்று (31) தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, கடந்த 2020.12.27 ஆம் திகதி   46 பேரின் இரத்த மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மட்டக்களப்பு கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் இருந்து ஒருவருக்கு மாத்திரம் தொற்று உறுதி செய்யப்பட்ட அறிக்கை கிடைத்திருப்பதாகவும் அந்த நபர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பபட்டுள்ள கிண்ணியா - 3, அகமட் லேனைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்த அவர், இப்போது இப்பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

எமது பிரதேசத்தில் இருந்து இதுவரை 12 பேர் கொவிட் - 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டிருக்கிறார்கள் என்றும் மேலும் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் வெளி இடத்தில் இனங்காணப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 2020.12. 28 ஆம் திகதி 97 பேரின் இரத்த மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மட்டக்களப்பு கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதனுடைய முடிவுகள் நாளை மாலை கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.  




No comments