பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் இடமாற்றம்
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் ஏ.எம்.ஏ. அஜீத் குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு இன்று (30) முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் எம்.எச்.எம்.றிஸ்வி கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வருடாந்த இடமாற்ற திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் இந்த இடமாற்ற செய்யப்பட்டுள்ளது.






No comments