Breaking News

உள்ளுராட்சி மன்றங்களுக்கு வெளிப்படைத் தன்மை அவசியம்

 


(பொன். சற்சிவானந்தம்)

பரீட்சாத்தமாக உள்ளுராட்சி மன்றச் செயற்பாட்டுத் தளத்தில் வெளிப்படைத் தன்மை,மக்கள் பங்கேற்றலுடன் பொறுப்பேற்றல் தன்மைகொண்ட புதிய உள்ளுராட்சி ஆளுகையை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும் என இளைஞர் அபிவிருத்தி அகத்தின் மதியுரைஞர் சக்திவேல் பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

நேற்று (25) வெருகல் பிரதேச செயலாளர் தலமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற திட்ட அறிமுக கலந்துரையாடலில் பேசுகின்றபோதே மேற்படி கருத்தை பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

மூதூர் மற்றும் வெருகல் பிரதேச சபை வட்டாரங்களில் ஆசிய பவுண்டேசன் அமைப்பின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகின்ற  இத் திட்டச் செயற்பாடு குறித்து விளக்கமளிக்கும் கலந்துரையாடல் பிரதேச செயலாளர் க.குணநாதன் தலமையில்  செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, உள்ளுராட்சி மன்றங்களின் நல்லாட்சிக்கான இச்செயற்பாடு தொடர்பாக முன்னணி அதிகாரிகளை தெளிவு படுத்தப்பட்டது.

இங்கு மேலும் கருத்துவெளியிட்ட பாலகிருஸ்ணன், முற்றிலும் அரசால் ஏலவே ஏற்படுத்தப்பட்டு முழுமையாக நடமுறைக்கு வராத புதிய கொள்ளை தொடர்பாக உள்ளுராட்சி மன்ற கிராமிய தலமைத்துவங்களை தெளிவு படுத்தும் செயற்பாடாக இது அமையவுள்ளது.

எதிர் காலத்தில் உள்ளுராடச்சி மன்றங்கள் முன்னெடுக்கின்ற அபிவிருத்தி பணிகளில் மக்கள் பங்களிப்பை கூட்டுவதுடன் பொறுப்புச்சொல்லும் ஆளுகையை வளர்கவே இச்செயற்பாடு பரீட்சாத்தமாக மேற்கொள்ளப்படுகின்றது.

இதன்போது மக்களோடு நெருங்கி செயற்படுகின்ற உங்களைப் போன்ற அதிகாரிகளின் பங்குபற்றுதல்களும் இச்செயற்றிட்டத்தை வெற்றி பெற வைப்பதற்கு தேவையாகவுள்ளது. அபிவிருத்திக் கட்டமைப்பில் பிரதேச செயலகம்,பிரதேச சபை என்பன மிக முக்கி பங்காற்றுகின்றன.

அவற்றில் மக்களின் பங்குபற்றுதலை உறுதிப்படுத்துவதன் மூலம் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாட்டுத் தளத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தலாம்.மக்கள் பங்கேற்றலை உறுதிபடுத்தலின் ஊடாக பொறுப்பேற்றல் தன்மைகொண்ட புதிய உள்ளுராட்சி ஆளுகையை கட்டி எழுப்ப முடியும் அவ்வாறு செய்கின்றபோது தற்போது மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திப் பணிகள்கள் ஊழல் குறைந்ததாகவும் பேண்தகு தன்மையையும் கொண்டதாக அமையும் எனவும் குறிப்பிட்டார். 

அதனடிப்படையில் மூதூர் மற்றும் வெருகல் பிரதேசபை பிரிவுகளில் இச்செயற்பாட்டை நாம் பரீட்சாத்தமாக செயற்படுத்துகின்றோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவிதிட்டமிடல் அதிகாரி,எஸ்.முரளிதரன்,கிராம அபிவிருத்தி அதிகாரி கிராம திட்ட அபிவிருத்தி அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். அகத்தின் திட்ட முகாமையாளர் த.திலீப்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.



No comments