கல்முனையில் 10 கிராமங்கள் விடுவிப்பு
கடந்த 28 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கல்முனையிலுள்ள 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இன்று (25) காலை 6.00 மணி முதல் விடுவிக்கப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 28ஆம் திகதி முதல் கல்முனை செயிலான் வீதி தொடக்கம் வாடி வீடு வீதி வரையான, கல்முனை வடக்கில் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் கல்முனை தெற்கில் 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
இன்று (25) காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
1. கல்முனை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
கல்முனை 1 Cகல்முனை 1Eகல்முனை 2கல்முனை 2Aகல்முனை 2Bகல்முனை 3A
2. கல்முனை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
கல்முனை 01 (MD)கல்முனைக்குடி 01கல்முனைக்குடி 02கல்முனை 03 (MD)
இன்று (25) காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
1. அம்பாந்தோட்டை: அம்பலாந்தோட்டை பிரதேச சபைக்குட்பட்ட இல 140 - போலான தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மெல்கொணிய கிராமம்
2. பூஜாபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் (MOH) பல்லியகொட்டுவ, கல்ஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு
- தினகரன் -






No comments