முஸ்லிம்களின் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நான்கு வருட பூர்த்தியையொட்டி, ஏற்பாடு செய்யப்பட்ட மூதூர் தொகுதிக்கான சம்மேளனக் கூட்டம் இன்று (24) கிண்ணியாவில் நடைபெற்றது
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கபில நுவன் அத்துகோரள அவர்களது தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினரிடமிருந்தும் முன்வைக்கப்பட்டது.
மேலும் மூதூர் தொகுதியில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மகளீர் அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டது
இதற்கு பதிலளித்து உரையாற்றி பாராள உறுப்பினர் கபில நுவான் அத்துகோரள இன்னும் ஓரிரு வாரங்களில் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் எனத் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களுக்கான உரிய ஆசன ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.








No comments