Breaking News

இலங்கைக்கு 10வது இடம்



கொவிட் – 19 வைரஸ் தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 10வது இடம் கிடைத்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள சுயாதீன மற்றும் பக்கச்சார்பற்ற ஆய்வகமான லொவி நிறுவனம் தெரிவிக்கின்றது.

உலகிலுள்ள 98 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.

உலகிலேயே கொவிட் தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளில் நியூஸிலாந்துக்கு முதலாவது இடம் கிடைத்துள்ளது.

நியூஸிலாந்துக்கு அடுத்தப்படியாக வியட்நாம், தாய்வான், தாய்லாந்து, சைப்ரஸ், ருவன்டா, ஐஸ்லாந்து, அவுஸ்திரேலியா, லெட்வியா, இலங்கை ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

தெற்காசிய நாடுகளில் இலங்கையே முதல் 10 நாடுகளுக்குள் காணப்படுகின்றது.

உலகில் அதிகளவிலான கொவிட் உயிரிழப்புக்களை கொண்ட நாடான அமெரிக்கா, இந்த தரப்படுத்தலில் 94ஆவது இடத்தை பிடித்துள்ளது

No comments