கிண்ணியா பாடசாலைகளுக்கு 25 ஆசிரியர்கள் நியமனம்
( கியாஸ் ஷாபி)
கிண்ணியா வலய பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு, தேசிய கல்வி கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கான கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களை உரிய ஆசிரியர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான வைபவம் இன்று (17) கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, 25 ஆசிரியர்களுக்கான நியமன கடிதங்களை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசூஹர்கான் வழங்கி வைத்தார்.
தேசிய பாடசாலைக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு உரிய அதிபர்களுக்கு கல்வி அமைச்சில் இருந்து நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








No comments