Breaking News

இலங்கையில் 50 மாணவர்களுக்கு குறைவான 1400 பாடசாலைகள்.





இலங்கையில் 50 மாணவர்களுக்கு குறைவான 1400 பாடசாலைகள் உள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

அத்துடன், 100 மாணவர்களுக்கு குறைவான 3000 பாடசாலைகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

500 ற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகள், மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கையில் 70 வீதம் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

35 மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளுக்கு கூட, அனைத்து ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டியுள்ளமையினால், அரசாங்கத்திற்கு நன்மை இல்லாத செலவீனம் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்


No comments