Breaking News

9 மாதக் குழந்தை உட்பட நான்கு பேருக்கு கொரோனா!

 

(கியாஸ் ஷாபி) 

குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட காக்காமுனை கிராம சேவகர் பிரிவில்  இன்று (28) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளனர் என குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் A.M.M.அஜித் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், திருகோணமலை நீதிமன்றத்தில் பணிபுரியும் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கடந்த 21 ஆம் திகதி முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருந்தார்.

இந்த நிலைையில், அவருக்கு ஏற்பட்ட தொற்று அறிகுறியின் அடிப்படையில், அவர் இன்று அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனை அடுத்து, அவரது மனைவி, 9 மாத குழந்தை மற்றும் 5 வயது குழந்தை ஆகியோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர் என்று தெரிவித்தார்.

இதேவேளை, குறிஞ்சாக்கேணி  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த, 2 வது கொரோனா அலைக்குப் பின்னர் இந்த பிரதேசத்தில்   கொரோனா தொற்றாளர்களர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



No comments