குச்சவெளி பிரதேச சபையின் 2021 ஆண்டுக்கான சபை அமர்வு
குச்சவெளி பிரதேச சபையின் 2021 ம் ஆண்டுக்கான முதலாவது சபை அமர்வு தவிசாளர் ஏ.முபாறக் தலைமையில் நேற்று (27) நடைைபெற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
இதன் போது தவிசாளர் தனது, தலைமையுரையில்,
இந்த ஆண்டின் முதல் மாதத்துக்கான அமர்வில் கலந்துகொண்ட எமது கௌரவ உறுப்பினர்களுக்கும் மற்றும் பிரதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் முதலில் தனது நன்றியைைத் தெரிவித்தார்.
அதன் பின்னர் கடந்த ஆண்டு எம்மை பெரிதும் அச்சுறுத்திய Covid 19 தாக்கம் காரணமாக பல அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்த முடியவில்லை எனவே அதன் தாக்கம் இன்றுவரை தொடர்வதாலும் இவ்வருடம் நாம் பல அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்காக செய்யவேண்டும் எனவே சபை உறுப்பினர்கள் தொடர்ந்து பூரணமாக எம்மோடு ஒத்துழைப்பு நல்கி சிறப்பாக சபையின் அபிவிருத்திகளை முன் கொண்டு செல்வோம் என்று கூறினார்.
அத்துடன் இந்த சபை அமர்வில் பின்வரும் பல அபிவிருத்தி திட்டங்களை தவிசாளர் முன்வைத்தார்.
(01)- கடந்த மாதம் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வீதிகளை புனரமைக்க ஒவ்வொரு வட்டார உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு.
(02)-சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படும் முன்பள்ளிகளை ஆராய்ந்து, அவற்றை உள்வாங்குதல் அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் சம்பளம் வழங்குதல்.
(03)-காணி அனுமதிப்பத்திரம் இதுவரை கிடைக்காதவர்களுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக உரிய அமைச்சு மட்டங்களில் நடவடிக்கை எடுத்தல்.
(04)-மகளீர் உறுப்பினர்கள் தலைமையில் தெண்ணமரவாடி தொடக்கம் பெரியகுளம் வரையான பகுதிகளில் உள்ள சிறுவர்/சிறுமிகளுக்கு (வறுமை நிலை) உதவிகள் வழங்கல்.
(05)-விசேட தீர்மானமாக கட்டாய சிரமதானம். அதாவது ஒவ்வொரு வட்டார உறுப்பினர்களும் தங்களது வட்டார பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர் மற்றும் சூழல் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரிகள் சகிதம் வட்டார உறுப்பினர் தலைமையில் வாரம் ஒருமுறை சிரமதானம் நடாத்துதல்.
(06)-சபையின் வீதிகளுக்கு பெயர் சூட்டி வர்த்தமானியில் பிரசுரிக்க முடிவு செய்தல்.
(07)-சபையின் நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் கொள்வனவு செய்வது அத்துடன் நூலகங்களை மேம்படுத்துதல்.
(08)-குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர்களின் கௌரவம் அரச நிறுவனங்களிலும் அரச கூட்டங்களிலும் பாதுகாக்கபட நடவடிக்கை எடுத்தல்.
இங்கு உரையாற்றிய அனைத்து உறுப்பினர்களும் தவிசாளரின தொடர் சேவைகளை பாராட்டியதுடன் தகுதியான தவிசாளருடன் தாங்கள் தொடர்ந்து பயணிப்பதாகவும் கூறினார்கள்.






No comments