வைத்தியசாலை ஊழியர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை!
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா தள வைத்தியசாலையில் கொவிட் - 19 தொற்றுக்கு ஆளாகிய வைத்தியரோடு பணி புரிந்த, வைத்தியசாலை ஊழியர்கள் 8 பேர் இன்று (13) அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் எவரும் தொற்றாளர்களாக இனங்காணப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, இவர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த 8 பேரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு, அவை PCR பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






No comments