குறிஞ்சாக்கேணியில் கொரோனா தொற்று பரிசோதனை!
(கியாஸ் ஷாபி)
குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (16) 26 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா அன்டிஜென் பரிசோதனையில் எவரும் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பபடவில்லை என குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் A.M.M.அஜித் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்றைய பரிசோதனைக்கு கிண்ணியா சுகாதாரப் பிரிவில் இருந்து கச்சக்கொடித்தீவு பிரதேசத்துக்கு வேலை மற்றும் வேறு தேவை நிமிர்த்தம் வந்தவர்கள் எழுமாறாக எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கிண்ணியாவில்
தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டு வருவதால், குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் முற்பாதுகாப்பு நடவடிக்கைள் அவசியமாகும். எனவே, இப்பிரதேச மக்கள் அலட்சியமாக இருந்து விட முடியாது.
குறிஞ்சாக்கேணி சுகாதாரப் பிரிவின் சூரங்கல் பகுதியில் இருந்து ஒரு பெண் தொற்றாளர் மாத்திரமே இதுவரை இனங்காணப்பட்டிருக்கிறார்.
இந்த நிலைையில், தநாளாந்தம் பிரயாணம் செய்பவர்கள், அடிக்கடி பயணம் செய்பவர்கள், அங்காடி வியாபாரிகள், வியாபாரிகள், சாரதிகள் ஆகியோர் தாமாக முன்வந்து இந்த பரிசோதனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.






No comments