முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை யாழ். பல்கலையில் அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. இதனையடுத்து மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டமும் முடிவுக்கு வந்தது.
பல்கலையின் துணைவேந்தரால் கஞ்சி கொடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 8 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். சர்வதேச மட்டத்திலும் கண்டங்கள் வெளியிடப்பட்டன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நினைவுத்தூபிளை மீளவும் நிர்மாணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.







No comments