Breaking News

கிழக்கின் இலக்கிய விருதிற்காக எம்.சீ.எம்.ஷெரீப் தெரிவு

  

(பொன் சற்சிவானந்தம் ) 

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் விருது பெறுவதற்காக தெரிவான கலைஞர்கள் விபரம் வெளியாகியுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து 2020 ம் ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்குவதற்காக 12 கலைஞர்களைத் தெரிவு செய்துள்ளது.  

இவ்விருதான "வித்தகர் விருது" பெறுபவர்களுள்  ஒருவராக மூதூரைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண கூட்டுறவு உதவி ஆணையாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற, சிரேஷ்ட அரச நிருவாகத் துறை அதிகாரியும், பல்துறைசார்ந்த வரலாற்றுத் தகவல்களை சுவடுகளாக்கியவருமான எம். சி.எம் ஷெரீப் (BA,SLAS) தெரிவு செய்யப்பட்டுளளார்.

இவர் மூதூரை பிறப்பிடமாக கொண்டதுடன் மூதூர், ஏறாவூர், போன்ற இடங்களில் பிரதேச செயலாளராகவும் பணியாற்றியதுடன் இரண்டுமுறை மாகாண கூட்டுறவு உதவி ஆணையாளராகவும், கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராகவும் பணியாற்றினார். அத்துடன் இவர் சில நூல்களையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments