கிண்ணியா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சுகாதார பணியாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கொரோனா தடுப்பூசி மருந்து (COVIDSHIELD) ஏற்றும் நிகழ்வு இன்று கிண்ணியா தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன்போது கிண்ணியா தள வைத்தியசாலை உதவி வைத்தியட்சகர் A. M. ஜிப்ரி, திருகோணமலை தாய், சேய் நல மருத்துவ அதிகாரி எம்.எச்.சமீம், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி உட்பட பல வைத்தியர்களும், சுகாதார மற்றும் வைத்தியசாலை ஊழியர்களும் இந்த தடுப்பூசி மருந்தினை ஏற்றிக் கொண்டனர்.








No comments