இலங்கையின் கட்டாய எரிப்பு கொள்கையை அமெரிக்கா எதிர்க்கிறது.
கோவிட் - 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி சடங்குகள் தொடர்பாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி, மத நம்பிக்கை மற்றும் கலாச்சார மரபுகளுக்கு இடமளிக்குமாறு இலங்கை அதிகாரிகளை அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வலியுறுத்தியது.
வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகம் பின்வருமாறு டுவீீட்டர் செய்தியை வெளியிட்டிருந்தது.
இதேவேளை, WHO இன் வழிகாட்டல்களுக்கு இனங்க, "COVID-19 ஆல் இறந்தவர்களை அடக்கம் செய்யலாம்." இலங்கையின் கட்டாய எரிப்பு கொள்கை குறித்து அமெரிக்கா தனது கவலையைத் தெரிவித்துள்ளதுடன், அதன் பல்வேறு சமூகங்களின் மரபுகளுக்கு மரியாதை செலுத்துமாறு வலியுறுத்துகிறது ”என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது டுவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.








No comments