கிண்ணியாவில் மேலும் இருவருக்கு கொரோனா!
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருந்து இன்று (23) இருவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி சற்று முன்னர் தெரிவித்தார்.
இது குறித்து அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில், திருகோணமலை நீதிமன்றத்தில் கடமையாற்றும் சகல ஊழியர்களும் இன்று திருமலை சுகாதார அதிகாரி அலுவலகத்தினால் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அதில் கிண்ணியா சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட குட்டிக்கராச் பிரதேசத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் தொற்றாளராக இனங்காணப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவரது முதன் நிலை தொடர்பாளர்கள் 12 பேரை இன்று நாங்கள் அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தியிருந்தோம். இதன்போது, இவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் 21 நபர்களின் இரத்த மாதிரிகள் PCR பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த அவர்,
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த 2வது கொரோனா அலைக்குப் பின்னர் மொத்தமாக 82 நபர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.






No comments